பின்னால்

தமிழ் வழிகாட்டிகள்

தொழில் நடத்துபவர்களுக்குக் கணக்கு, costing, GST reconciliation, cash flow பற்றி எளிய விளக்கங்கள்.

சேவைகள் · தமிழில் எழுதுங்கள்

எது உங்களுக்கு உதவும்?

பணம் எங்கே முடங்குகிறது, ஒரு பொருளுக்கு என்ன செலவு, மாதக் கணக்கை எப்படி முடிப்பது, GST வேறுபாடுகளை எப்படிப் பார்ப்பது: உதாரணங்களோடு படிக்கலாம். ஆங்கிலத்தில் உள்ள worksheets-ஐத் தனியாகக் குறித்திருக்கிறோம்.

Shareable English–Tamil answer series

Answer 1 — Why is profit different from cash?

English: Profit measures income and expenses for a period. Cash depends on when money is received and paid. A credit sale may increase profit before the customer pays. Read profit, customer balances, stock and upcoming payments together.

Tamil explanation: லாபம் என்பது ஒரு காலத்தின் வருமானத்துக்கும் செலவுக்கும் உள்ள வேறுபாடு. கையில் பணம் இருப்பது, பணம் எப்போது வருகிறது, எப்போது போகிறது என்பதைப் பொறுத்தது. கடனுக்கு விற்றால் லாபம் ஏறும்; ஆனால் வாடிக்கையாளரிடமிருந்து பணம் இன்னும் வராமல் இருக்கலாம். அதனால் லாபத்தோடு, வர வேண்டிய பணம், stock, வரப்போகும் செலவுகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பாருங்கள்.

Answer 2 — Before giving a discount

English: Check what the discount does to contribution, not only to sales. If price falls while variable cost stays the same, contribution per unit falls faster than the sales percentage may suggest. Consider the volume and capacity assumptions before deciding.

Tamil explanation: தள்ளுபடி கொடுப்பதற்கு முன், விற்பனைத் தொகையை மட்டும் பார்க்காதீர்கள். விற்பனை விலையிலிருந்து மாறும் செலவைக் கழித்த பிறகு மீதி (contribution) எவ்வளவு குறைகிறது என்று பாருங்கள். விலை குறைந்து, செலவு அப்படியே இருந்தால், ஒவ்வொரு பொருளிலும் மீதி நிறையவே குறையலாம். கூடுதல் விற்பனை வருமா, அதற்கு உற்பத்தித் திறன் இருக்கிறதா, வாடிக்கையாளர்கள் உண்மையில் அதிகம் வாங்குவார்களா என்ற அனுமானங்களையும் சரிபாருங்கள். இங்கே ஒவ்வொரு பொருளின் மாறும் செலவு மாறவில்லை என்று எடுத்துக்கொண்டிருக்கிறோம்.