பின்னால்

சேவை · 03

Internal audit, கட்டுப்பாடுகள்

Controls உண்மையில் வேலை செய்தால்தான் பயன். வேலை நடக்கும் முறையை ஆதாரங்களோடு சோதிக்கிறோம்; புத்தகம் சொல்வதையும் கையில் உண்மையில் இருப்பதையும் ஒப்பிடுகிறோம்; ஆபத்து (risk) அதிகம் உள்ள இடங்களிலிருந்து தொடங்கி controls-ஐ வலுப்படுத்துகிறோம்.

நாங்கள் செய்வது

01

Internal audit (உள் தணிக்கை)

தொழில் உண்மையில் எப்படி நடக்கிறது என்று வெளியிலிருந்து ஒரு நடுநிலைப் பார்வை.

  • Companies Act, 2013 பிரிவு 138-இன் கீழ் internal auditor-ஆக நியமனம்
  • ஆபத்து அதிகமுள்ள இடங்களை முதலில் பார்க்கும் ஆண்டு ஆடிட் திட்டம்
  • யூனிட், கிளை, துறை வாரியான ஆடிட்
  • நிர்வாகத்துக்கோ audit committee-க்கோ குறித்த இடைவெளியில் அறிக்கை
  • ஒப்புக்கொண்ட திருத்தங்கள் நடந்ததா என்று பின்தொடர்வது
  • பிரிவு 138 பொருந்தாத நிறுவனங்களுக்கும் internal audit
02

Stock, physical verification

புத்தகத்தில் இருப்பது உண்மையில் கையில் இருக்கிறதா என்று பார்ப்பது.

  • குறித்த இடைவெளியில் stock-ஐ நேரில் எண்ணிப் பார்ப்பது
  • மூலப்பொருள், work-in-progress, முடிந்த பொருட்கள் எண்ணிக்கை
  • கையில் உள்ள stock-ஐப் புத்தகத்தோடு பொருத்திப் பார்ப்பது (reconciliation)
  • வங்கிக்காக stock சரிபார்ப்பு
  • Fixed assets சரிபார்ப்பு, tagging
  • Scrap, வீணாவது, rejection சோதனை
03

Process, controls ஆய்வு

தவறுகளும் இழப்புகளும் பொதுவாகத் தொடங்கும் இடங்கள்.

  • Purchase order முதல் சப்ளையருக்குப் பணம் கொடுக்கும் வரை
  • ஆர்டர் முதல் பணம் வசூலாகும் வரை
  • Stores, stock நகர்வு
  • Payroll, வருகைப் பதிவு
  • Fixed assets, மூலதனச் செலவு
  • ரொக்கம், வங்கி, petty cash
04

Concurrent audit, சிறப்பு ஆடிட்கள்

வரவு-செலவு நடந்த உடனேயே, தொடர்ந்து சரிபார்ப்பது.

  • NBFC, மற்ற கடன் கொடுக்கும் நிறுவனங்கள்
  • காப்பீட்டு நிறுவனங்கள், இடைத்தரகர்கள்
  • கூட்டுறவுச் சங்கங்கள், கடன் சங்கங்கள்
  • வர வேண்டிய வருமானம் கசிகிறதா (revenue leakage)
  • சப்ளையர்கள் ஒப்பந்தப்படி நடக்கிறார்களா என்று சோதனை
  • கிளை, depot, franchise ஆடிட்கள்
05

SOP, controls அமைப்பது

Control-ஐ எழுதி வைத்து, பிறகு அது உண்மையில் நடக்கிறதா என்று சோதிப்பது.

  • SOP-கள்
  • யார் எதற்கு ஒப்புதல் தரலாம் (delegation of authority, approval matrix)
  • ஒரே ஆள் எல்லா வேலையையும் செய்கிறாரா (segregation of duties)
  • Risk register, control matrix
  • Controls-ஐச் சோதிப்பது, திருத்தங்களைப் பின்தொடர்வது
  • உள் கட்டுப்பாடுகள் பற்றிய நிர்வாக அறிக்கைக்கு உதவி

யாருக்கு ஏற்றது

Stock, process ஆபத்துகள் உள்ள உற்பத்தியாளர்கள்; பிரிவு 138 அளவைத் தாண்டும் நிறுவனங்கள்; reconciliation வேறுபாடுகளோ stock குறைவோ திரும்பத் திரும்ப வரும் தொழில்கள்; நடுநிலையான சரிபார்ப்பு தேவைப்படும் வங்கிகள், அமைப்புகள். தமிழ்நாடு முழுவதும் வேலை செய்கிறோம்; தேவைப்படும்போது நேரில் வருகிறோம்.

பொதுவான கேள்விகள்

எங்கள் நிறுவனத்துக்கு internal audit கட்டாயமா?

பங்குச் சந்தையில் listed ஆன எல்லா நிறுவனங்களுக்கும் கட்டாயம். Unlisted public companies-க்கு, முந்தைய ஆண்டில் இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கட்டாயம்: paid-up capital ₹50 கோடி அல்லது அதற்கு மேல்; turnover ₹200 கோடி அல்லது அதற்கு மேல்; ஆண்டில் எப்போதாவது வங்கிகள் அல்லது பொது நிதி நிறுவனங்களிடமிருந்து ₹100 கோடிக்கு மேல் கடன்; deposits ₹25 கோடி அல்லது அதற்கு மேல். Private companies-க்கு இரண்டு அளவுகள் மட்டும்: turnover ₹200 கோடி அல்லது அதற்கு மேல், அல்லது ஆண்டில் எப்போதாவது ₹100 கோடிக்கு மேல் கடன். கடன் அளவு ஆண்டு இறுதி நிலுவையை மட்டுமல்ல, ஆண்டின் எந்த நாளையும் பார்க்கிறது.

ஒரு Cost Accountant-ஐ internal auditor-ஆக நியமிக்கலாமா?

ஆம். Chartered Accountant, Cost Accountant, அல்லது Board முடிவு செய்யும் வேறு professional என்று பிரிவு 138 சொல்கிறது. Internal auditor ஒரு தனிநபர், ஒரு firm, அல்லது ஒரு body corporate ஆக இருக்கலாம்; நிறுவனத்தின் ஊழியராக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

எங்கள் statutory auditor-ஏ internal audit-ஐயும் செய்யலாமா?

இல்லை. Statutory auditor தான் ஆடிட் செய்யும் நிறுவனத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்யக்கூடாத வேலைகளில் internal audit-ஐயும் பிரிவு 144 பட்டியலிடுகிறது.

Stock-ஐ எத்தனை முறை சரிபார்க்க வேண்டும்?

Stock-இன் மதிப்பையும், எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதையும் பொறுத்தது. வேகமாக நகரும் அல்லது மதிப்பு அதிகமான stock-க்குப் பெரும்பாலும் மாதா மாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை; மெதுவாக நகரும் பொருட்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை, இடையில் sample checks. எத்தனை முறை என்பதை விட முக்கியம், வேறுபாட்டைச் சும்மா adjust செய்யாமல் காரணத்தைக் கண்டுபிடிப்பது: வரவு, வெளியே அனுப்பியது, திரும்பி வந்தது, rejection, அல்லது மதிப்பு போட்ட விதம்.

Internal audit அறிக்கையில் உண்மையில் என்ன இருக்கும்?

எதைப் பார்த்தோம் (scope), எதை எப்படிச் சோதித்தோம், ஆதாரங்களோடு கண்டுபிடிப்புகள் (findings), ஒவ்வொன்றிலும் உள்ள ஆபத்து, பொறுப்பாளர் பெயரோடும் தேதியோடும் ஒப்புக்கொண்ட நடவடிக்கை. முந்தைய அறிக்கையின் findings-உம் அவற்றின் நிலையும் அடுத்த அறிக்கையில் தொடரும்; அதனால் எதுவும் கவனிக்காமல் மறைந்து போகாது.

ஆண்டு முழுவதற்கும் இல்லாமல், ஒருமுறை மட்டும் ஆய்வு செய்ய முடியுமா?

ஆம். Stock சரிபார்ப்பு, கொள்முதல் process சோதனை போன்ற ஒரு ஆய்வாகவே பல வேலைகள் தொடங்குகின்றன; கண்டுபிடிப்புகள் அதற்கு அவசியம் காட்டினால் மட்டுமே தொடர் வேலையாக மாறும்.

எங்களுக்குப் பிரிவு 138 பொருந்தாது. இருந்தும் internal audit பயன் தருமா?

பெரும்பாலும் ஆம், குறிப்பாக stock, ரொக்கம் அல்லது பல இடங்களில் வேலை இருக்கும்போது. குறைவான ஆட்கள் அதிக வேலையைப் பார்ப்பதால், அளவுக்குக் கீழே உள்ள பல தொழில்களில் பெரிய தொழில்களை விட process ஆபத்து அதிகம்.

எங்கள் இடத்துக்கு நேரில் வருவீர்களா?

ஆம். Physical verification, வேலை நடப்பதை நேரில் பார்ப்பது (process walkthrough), controls எப்படி நடக்கின்றன என்று கவனிப்பது போன்ற வேலைகளுக்கு வருகிறோம். ஆவணங்களைப் பார்க்கும் வேலையை online-இலேயே செய்யலாம்.

உங்கள் controls ஒரு தவறைப் பிடிக்குமா என்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

ஒரு வேலை நாளுக்குள் பதில் சொல்கிறோம்.